Get Adobe Flash player

விருந்தினர்…


.

Facebook….

முகப்பு

அறிமுகம்


மயிலை ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலய ஆதீனகர்த்தாக்களில் ஒருவராகிய சிவஸ்ரீ நவமணி ஐயர் கும்பத்தினராகிய நாம் எமது வருங்கால சந்ததியினருக்கு எங்கள் ஆலயத்தின் மேன்மையையும் தொன்மையையும் அம்பாளின் அற்புதங்களையும் எடுத்தியம்புவதற்கான ஓர் ஆவண விபரிப்பாக இவ்வலைத்தளத்தைப் பயன்படுத்தியுள்ளோம்.

எமது ஆலயமாகிய ஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம் வரலாற்றுச் சிறப்பு மிக்கது. பண்டைக்கால நல்லூர் இராசதானியுடன் நெருங்கிய தொடர்புடையவரான வீரமாணிக்க தேவனினால் உருவாக்கப்பட்டது. அவரது வழித்தோன்றல்களே ஆலய பூஜா கைங்கரியங்களையும் ஆலய நிர்வாகத்தையும் நடைமுறைப்படுத்தி வந்துள்ளனர்.

ஸ்ரீ கண்ணகை அம்பாள் மேன்மையும் புகழும் அதிஅற்புதமானது. வழிபடும் பக்தர்களின் துன்ப துயரங்களை களைந்து வேண்டுவோர் வேண்டுவதை அருளும் அருட்திறம் உடையவளாக அம்பிகை ஆட்சி புரிந்தமை அடியவர்கள் அனைவரும் அறிந்ததொன்றே.

அம்பிகையை குலதெய்வமாக வழிபட்டு இஷ்ட சித்திகளைப் பெற்று மேன்மை பெற்ற அடியவர்கள் இன்றும் அம்பிகையை தமது இதய கோயிலில் வைத்து பூஐனை செய்து வருகின்றார்கள்.  எமது பூஜா கைங்கரியங்களை செய்யும் பாக்கியம் கிட்டாத இக்கால சூழ் நிலையில் ஆலயத்தை மையப்படுத்தி அறக்கைங்கரியங்களை செய்யவிழையும் மனப்பாங்கு எம்மிடையே உருவாகின்றது. இதனை முன்னெடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

__________________________________________

 

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை, அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் எதிர்கால அபிவிருத்தி

ஆலயம்சார்ந்த ஏனையநிகழ்சிகள், மற்றும் பொதுச்சபை தெரிவிற்குமான ஆலோசனைக்கூட்டம் பருத்தித்துறையில் 04.08.2013 அம்பாளின்  மெய்யடியார்களது ஆலேசனையின் வேண்டுகோளுக்கிணங்க நடாத்தப்பட்டது. இதற்கான இடத்தினை திரு நடராசா சிவநேசன் அவர்கள் தெரிவுசெய்து ஒழுங்கமைத்து தந்திருந்தார். ஆலேசனைக்கூட்டத்திற்கு வருகை தந்த அடியார்களது பெயர் விபரம் வருமாறு.

1.   திரு நவமணிஐயர் ரவிச்சந்திரன்
2.   திருமதி நிவேதிகா பாஸ்கரன்
3.   திரு கண்ணழகன் ஹேமலதன்
4.   திரு சிவபாக்கியம் தவரத்தினம்
5.   திரு செல்லச்சாமி சிவசுப்பிரமணியம்
6.   திரு சீராழபிள்ளை திருமாறன்
7.   திரு சீராழபிள்ளை ஜெயமாறம்
8.   திரு அருளானந்தம்  தமிழ்நாதன்
9.   திரு சோமசுந்தரம் சிவசுப்பிரமணியம்
10. திரு நடராசா சிவநேசன்
11. திரு முத்துச்சசாமி கருணாகரன்
12. திரு சோமசுந்தரம் முருகவேல்

கூட்டத்தில் எதிர்வரும் 18ம் திகதி ஆவணிமாதம் 2013 அன்று இதே இடத்தில் ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்திற்கு நிரவாகசபை ஒன்றைத்தெரிவதென அனைவராலும் எகமனதாகத் தீர்மானிக்கப்பட்டதுடன், அனைவரது கையொப்பங்கள் பெறப்பட்டது. கூட்டத்திற்கு சமூகமளித்த அனைவருக்கும் குளிர்பானம், சிற்றுண்டி மற்றும் மதியஉணவு ஆகியன திரு நடராசா சிவநேசன் அவர்களது தனிப்பட்டசெலவில் வழங்கப்பட்டு கூட்டம் இனிதே நிறைவுற்றது.

மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை அருள்மிகு ஸ்ரீ கண்ணகாதேவி தேவஸ்தானத்தின் பொதுச்சபைக்கூட்டம் 18.08.2013.

மேற்படி பொதுச்சபைக்கூட்டம் பருத்தித்துறை பிரதானமண்டபத்தில் காலை 11.30 மணியளவில் ஆலய அதீனகர்த்தாக்களான நிவேதிகா பாஸ்கரன் மற்றும் தலாநந்தினி குமாரசாமி தலைமையில் இறைவணக்கத்துடம் ஆரம்பமாகியது. முதலில் மேற்படி சபைக்கு நிர்வாக சபையைத் தெரிவுசெய்யவேண்டுமென்ற ஏகோபித்த அங்கத்தவர்களின் வேண்டுதலின்படி  நிர்வாகசபையைத் தெரிவுசெய்ய சபை தீர்மானித்தது.

அதன்படி முதலில் செயலயளராக நவமணி ரவிச்சந்திரன் அவர்களை  பூ. நந்தகுமாரன் முன்மொழிய திரு.மு.கருணாகரன் வழிமொழிய  செயலாளராக திரு நவமணி ரவிச்சந்திரன் ஏகமனதாகத்தெரிவுசெய்யப்பட்டார. அதனைத்தொடர்ந்து தலைவராக மு.கருணாகரனை திருரஞ்சனதேவர் முன்மொழிய  திரு செ.சுப்பிரமணியம் வழிமொழிய  தலைவராக முத்துச்சாமி கருணாகரன் ஏகமனதாகத்தெரிவு செய்யப்பட்டார். தொடர்ந்து பொருளாளராக திரு.பொன்னுச்சாமி ரஞ்சனதேவர் அவர்களை திரு மு.கருணாகரன் முன்மொழிய திரு தவரத்தினம் வழிமொழிய  பொருளாளராக திரு பொன்னுச்சாமி ரஞ்சனதேவர் ஏனமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து உபசெயலாளராக சிவராசா சிவநேசன் அவர்களை  மு.கருணாகரன் முன்மொழிய கேதீஸ்வரன் வழிமொழிய சபையினரால் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து பூமாலைராசா நந்தகுமார் அவர்களை  உபதலைவராக அ.தமிழ்நாதன் முன்மொழிய  த.இளங்கோ வழிமொழிய  உபதலைவராக திரு பூமாலைராசா நந்தகுமாரன் அவர்கள் ஏனமனதாக தெரிவு செய்யப்பட்டார. கணக்காளராக திரு மார்க்கண்டு தங்கேஸ்வரன் அவர்களை  திரு சிவசுப்பிரமணியம் முன்மொழிய திரு மா.கேதீஸ்வரன் அவர்கள் வழிமொழிய கணக்காய்வாளராக திரு மார்க்கண்டு தங்கேஸ்வரன் அவர்கள் ஏகமனதாகத்தெரிவுசெய்யப்பட்டார்.  ஒருங்கிணைப்பாளராக திருமதி நிவேதிகா பாஸ்கரன் அவர்களை பூ.நந்தகுமாரன் முன்மொழிய திரு மு.கருணாகரன் வழிமொழிய திருமதி நிவேதிகா பாஸ்கரன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் நிர்வாகசபை உறப்பினர்களாக தெரிவுசெய்யப்பட்டோர் விபரம் பின்வருமாறு:

1.   செல்லச்சாமி சிவசுப்பிரமணியம்
2.   சீராழபிள்ளை திருமாறன்
3.   சோமசுந்தரம் சிவசுப்பிரமணியம்
4.   கண்ணழகன் ஹேமலதன்
5.   சீராழபிள்ளை ஜெயமாறன்
6.   மாணிக்கவாசகர் கேதீஸ்வரன்
7.   தமிழ்நாதன் மச்சுதன்
8.   சிவபாக்கியம் தவரத்தினம்
9.   அரிகரிதாஸ் டெறஸ்கோ
10. தமிழ்நாதன் இளங்கோ
11. திருமதி அபிராமி நந்தகுமாரன்

மேற்படி பொதுக்கூட்டத்திற்கு சமூகமளித்தோர் விபரம்:

1.   முத்துச்சாமி கருணாகரன்
2.   சிவபாக்கியம் தவரத்தினம்
3.   பொன்னுச்சாமி ரஞ்சனதேவர்
4.   அரியரிதாஸன் டெரஸ்கோ
5.   தமிழட்நாதன் இளங்கோ
6.   சீராழபிள்ளை திருமாறன்
7.   சீராழபிள்ளை ஜெயமாறன்
8.   செல்லச்சாமி சிவசுப்பிரமணியம்
9.   மாணிக்கவாசகர் கேதீஸ்வரன்
10. அருளானந்தம் தமிழ்நாதன்
11. தமிழ்நாதன் மச்சுதன்
12. நடராசா சிவநேசன்
13. கண்ணழகன் கேமலதன்
14. பூமாலைராசா நந்தகுமாரன்
15. நந்தகுமார் அபிராமி
16. குமாரசாமி கலாநந்தினி
17. பாஸ்கரன் நிவேதிகா
18. நவமணி ரவிச்சந்திரன்
19. லிங்கராசா சுதாகரன்
20. வேலுப்பிள்ளை புஸ்பநாதன்
21. சோமசுந்தரம் சிவசுப்பிரமணியம்

கூட்டத்தில் பலவிடயங்கள் ஆராயப்பட்ட பின் எதிர்வரும் 08 ம் திகதி 09 ம் மாதம் 2013 அன்று மீண்டும் காலை 11 மணிக்கு சபைகூடுவது என்றும் அதில்  நிர்வாகசபைக்கான யாப்பு விதிகள் தீர்மானிக்கப்படும் எனவும் சபை முடிவெடுத்தது.

திரு நடராசா சிவநேசன் அவர்களின் அனுசரணையுடன் கூட்டத்திற்கான இடம் ஒழுங்கு செய்யப்பட்டது. சமூகமளித்த அனைவருக்கும் திரு மாணிக்கவாசகர் கேதீஸ்வரன் அவர்களின் பிரத்தியேக செலவில் குளிர்பானம் மற்றும் சிற்றுண்டி என்பன வழங்கப்பட்டதுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

__________________________________________